இங்கிலாந்தில் வர்த்த நிலையங்கள் திங்கள் முதல் திறப்பு!

alok sharma
இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க
அனுமதிக்கப்படும் என என வணிகச் செயலாளர் அலோக் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

இங்கிலாந்தில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்த நிலையங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் .

சில்லறை விற்பனையாளர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வணிக நிலையங்களைத் திறக்க முடியும். அவ்வாறு இல்லாமல் திறக்கபடுமானால் அவர்களுக்கு அமுலாக்க அறிவிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

சமூக இடைவெளியான 2 மீற்றர் தூரத்தைத் குறைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா எனக் கேட்டபோது, நாங்கள் இவ்விடயங்கள் குறித்து மதிப்பாய்வுகளை செய்து வருகிறோம். ஆனால் எங்களால் ஒரு திகதியை வழங்க முடியாது.

ஜூலை 4 ஆம் திகதி வரை மது கேளிக்கை விடுதிகள், அருந்தகங்கள், உணவகங்கள் மற்றும் சிகையலங்கரிப்பு நிலையஙகள் மீண்டும் திறக்க முடியாது என்றார்.

இதேநேரம் வடக்கு அயர்லாந்தில், அனைத்து கடைகளும் வெள்ளிக்கிழமை முதல் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் அத்தியாவசியமற்ற கடைகளை மீண்டும் திறப்பதற்கான திகதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments