முன்னணி-யாழ்.ஆயர் சந்திப்பு!


தேர்தல் அறிவிப்பின் பின்னராக கத்தோலிக்க மக்களது வாக்குகளை மையப்படுத்தி சந்திப்புக்களை பல தரப்புக்களும் நடத்திவருகின்றன.

அவ்வகையில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டைக்கும்; தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர்.
கடந்த வாரம் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்.ஆயரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments