தமிழ் மக்களுக்கு அரணாக புதிய கூட்டணி எப்போதும் இருக்கும்!!

இந்த பொதுத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். 30 வருட யுத்தம் இழப்புக்களை தந்தது. ஆனால் தீர்வுகள் எட்டாக்கனியாகவே உள்ளது. பதவிக்கு  வந்த ஆட்ச்சியாளர்கள் மாறி மாறி தங்கள்து ஏமாற்று வித்தைகளை காட்டினார்கள்.

இன்றைய ஆட்ச்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே பௌத்தமாக மாற்றும் வேலைத்திட்டத்தில் இறங்கி உள்ளார்கள். என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர்  ஸ்ரீ காந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை  (25.06.2020 ) உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நேத்ரா உல்லாச விடுதியில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

தமிழ் தேசியக் கட்சியின் தலைவர்  ஸ்ரீ காந்தா தலைமையில் இடம்பெற்ற இவ்வூடக சந்திப்பில், உரையாற்றிய போதே மேற்படி கருத்தை ஸ்ரீ காந்தா அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

5 கட்சிகள் உள்ளடங்கலாக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலே மேற்படி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது மீன் சின்னத்தில் போட்டியிடும் எமது கட்சி இம்முறை  கூட்டமைப்பிற்கு சவாலாகவே உருவாக்கி உள்ளது என்பதை கூறித்தான் ஆக வேண்டும் என்றார்.

இந்த பொதுத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். 30 வருட யுத்தம் இழப்புக்களை தந்தது. ஆனால் தீர்வுகள் எட்டாக்கனியாகவே உள்ளது. பதவிக்கு  வந்த ஆட்ச்சியாளர்கள் மாறி மாறி தங்கள்து ஏமாற்று வித்தைகளை காட்டினார்கள் தவிர எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இன்றைய ஆட்ச்சியாளர்கள் தீர்வுக்கு பதிலாக தேசத்தையே பௌத்தமாக மாற்றும் வேலைத்திட்டத்தில் இறங்கி உள்ளார்கள். நாங்கள் நாட்டை பிரித்து கேற்கவில்லை நியாயமான தீர்வு ஒன்றையே வேண்டி நிற்கிறோம்.

தொல்பொருளியல் என்ற போர்வையில் விகாரை மயமாக்கும் வேலைத்திட்டங்களிலே அரசு அக்கறை செலுத்துகிறது. வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களே இன்று அரசின் இலக்காக உள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த ஒரு ஆட்ச்சியாளரும் கவனத்தில் கொள்ள வில்லை என்பதே வரலாறு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் இம்முறை தேர்தல் இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைதல்  வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால் தமிழர் கூட்டமைப்போ முட்டுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை பறை சாற்றி வருகின்றனர். தொடர்ந்து பல சந்தர்ப்பங்கள் அமைந்திருந்த போதும் சம்பந்தர் தரப்பு இந்த தமிழ் மக்களின் பிரச்சசினைகளுக்கு எதுவித தீர்வையும் கொண்டு வரவில்லை. போதாக்குறைக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தங்களின் ஆதரவு அமையும் அரசுக்கு உண்டு என்று போலியாக கூறி வருகின்றனர்.

ரணில் தரப்பு அரசுக்கு முட்டுக்கு கொடுத்தனர். எதிர்க்கடசியாக இருந்து ஒரு மாயாஜாலம் காட்டினார் இவை ஒன்றாலும் இவர்களால் தமிழர் தரப்பு பிரச்சினையின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.

இதற்குள் இம்முறை 20 பேர் பாராளுமன்றம் நுழைய உள்ளதாக பொய்யாக பேசி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.  ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆட்ச்சிக்கு வந்தால் வெள்ளை வேன் கலாசாரம் மீண்டும் உருவாகும் என்றவர்கள் தற்போது இதே ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டுக்கு ஆதரவு தருவோம் என்று கூறும் இந்த நடிப்பை தமிழ் மக்கள் இனியும் நம்பி ஏமாற்றப் போவதில்லை என்றார்.

19 தாவது திருத்தத்தை இல்லாமல் செய்ய திரைமறைவில் சதி நடைபெறுகின்றது. அதற்கும் இவர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என்பதை எவ்வாறு நம்புவது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் எண்கள் மண் எங்களால் ஆளப்படல் வேண்டும் குடியேற்ற திட்டம் என்ற பெயரில் மகாவலி திட்டத்தின் ஊடாக கபளீகரம் செய்யப்படும் எண்கள் நிலங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். தமிழ் தேசியத்தை தங்கியவர்களாக நாங்கள் இருக்கிறோம். ஒரு புதிய வரலாற்றை நாங்கள் எழுதப் போகிறோம்.

எனவே இனியும் எமது தமிழ் மக்கள் நம்பி ஏமாறாமல் உங்கள் அதிகாரத்தை ஏமாற்றுக்காரர்களின் ராஜபோக வாழ்க்கைக்கு தாரை வார்க்காமல் யோசித்து நடந்து கொள்ளுங்கள். இந்த புதிய கூட்டணி நிச்சயம் தமிழ் மக்களின் உரிமைகளின் அரணாக நிற்கும் என்று குறிப்பிட்டார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உபதலைவர் சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார் 

No comments