கருணாவுக்கு கைகொடுத்த சிவமோகன்?


ஓரே இரவில் மூவாயிரம் படையினரை கொன்றதாக கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் இன்று சுமார் நான்கரை மணி நேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.கிழக்கு சென்றிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.


இதனிடையே களத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயம். அதனைத்தான் கருணா கூறியுள்ளார். யுத்தத்தின் போது நேரடியாக மரணிப்பதை ஒரு விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு யுத்தகலத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம் பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்லது வேறு ஒரு குற்றமாக மாற்றப்படலாம். தமிழீழ விடுதலைப் புலிகள் கருணா தம்முடன் இருந்த காலத்தில் கூட சர்வதேச நியமங்களை ஏற்றுத்தான் யுத்தங்கள் இடம் பெற்றது. இலங்கை அரசு தான் சர்வதேச நியமங்களை மீறி தமது நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசிய செயல்கள் உண்டு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

ஒரு யுத்தத்தில் நேரடியாக சர்வதேச நியமங்களை ஏற்றுக்கொள்ளாமல் அதனை மீறி ஒரு நடவடிக்கை இடம் பெற்றிருந்தால் மட்டுமே அது ஒரு போர்க் குற்றமாக அல்லது வேறு ஒரு குற்றமாக மாற்றப்படலாம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை பொறுத்தமட்டில் கருணா இருந்த காலத்தில் கூட சர்வதேச நியமங்களை ஏற்றுத்தான் யுத்தங்கள் இடம் பெற்றது.
இலங்கை அரசு தான் சர்வதேச நியமங்களை மீறி தமது நாட்டு மக்கள் மீது குண்டுகளை வீசிய செயல்கள் உண்டு. எனவே எமது நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களின் உரிமைகள் சார்ந்தவையாக இருக்கும் எனவும் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

No comments