இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்!

இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களில் லெய்செஸ்டரில் நிலை கவலைக்குரியதாக உள்ளது.

கிழக்கு லெய்செஸ்டரில் உள்ள ஸ்பின்னி ஹில் பூங்காவில் ஒரு புதிய கோவிட் சோதனை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைத் தடுக்க நான்கு நடமாடும் சோதனை மையங்கள் ஏற்படுத்த இன்று அனுப்பப்பட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான சோதனைக் கருவிகள் வீட்டிலிருந்து சோதனை செய்ய வலைத்தளத்தில் வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லெசிஸ்டரில் உள்ளவர்கள் சமூக தூரத்தை கடைபிடிக்க வேண்டும் மற்றும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் சுகாதாரத்துறை தெரிவிக்கையில்:-

நாங்கள் நான்கு நடமாடும் சோதனை தளங்களை நிறுத்தியுள்ளோம். மற்றும் ஆயிரக்கணக்கான வீட்டு சோதனை கருவிகளை கிடைக்கச் செய்துள்ளோம், சோதனை தேவைப்படும் பகுதியில் உள்ள எவரும் ஒன்றைப் பெற முடியும்.

என்.எச்.எஸ் சோதனைகளின் முடிவில் யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தால் அவர்களைத் தொடர்பு கொள்வார்கள். அத்துடன் தொற்று நோயாளியுடன் யார் அருகில் இருக்கலாம் என்று ஆலோசனை கூறுவார்கள்.

லெய்செஸ்டர் மக்கள் தொடர்ந்து சமூக தூரத்தை கடைப்பிடிக்கவும். கைகளை தவறாமல் கழுவவும். அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதிக்கவும். என்.எச்.எஸ் தொடர்பு கொண்டால் அவர்கள் தரும் ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

லெய்செஸ்டர் நகரம் முதன் முறையாக முடக்க நிலையை எதிர்கொள்ளக்கூடும் என உள்துறைச் செயலாளர் பிரிதி படேல் இன்று உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments