தமிழரசு வீட்டினுள் கண்ட கண்ட நாய்களும் வருகின்றனவாம்?


தமிழரசுக்கட்சியை துப்புரவு செய்வதுடன் அதன் தலைவரை பாதுகாக்க மகளிரணி களமிறங்கியுள்ளது.

இதனிடையே தமிழரசுக்கட்சி தலைவரின் இருப்பினை காப்பாற்ற பெரியதொரு மகளிரணி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் குதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சியின் மகளிரணியினர் கட்சி தலைமையினை கைபற்ற சில சதிகாரர்கள் சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

பெண்கள் தமது வீடுகளை அழகாகவும் துப்பரவாகவும் வைத்திருப்பது வழமை.அவ்வகையில் எமது கட்சியின் சின்னமும் வீடாகும்.அதனை சுத்தமாக பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது எமது கடமை.

இதேவேளை கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்கள் மகளிரணியில் புறந்தள்ளப்பட்டு அம்பிகா,நளினியென புதியவர்கள் களமிறக்கப்பட்டனரேயென்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மகளிரணி பிரதிநிதிகள் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் தற்போது வீட்டிற்குள் வருகின்றன.

தேவையற்ற நாய்களை அடித்து விரட்டி வீட்டிற்கு சாம்பிராணி புகையிட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments