வடக்கை தாண்டி கிழக்கிலும் தமிழரசு மோதல்!


தமிழரசுக்கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான முரண்பாடு வடக்கை தாண்டி கிழக்கிலும் முனைப்படைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அம்பாறையிலும் முறுகல் நிலை உச்சமடைந்துள்ளதுடன் எம்.ஏ.சுமந்திரனின் அம்பாறை கூட்டத்தை புறக்கணித்த 8 வேட்பாளர்கள் தொடர்பில் கட்சி தலைமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கூட்டணி ஒழுக்கமின்றி, கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சி ஒன்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை மகிந்த பாணியில் உருவி எடுத்து தமிழரசு கட்சி வேட்பாளர் ஆக்கியதால் அம்பாறையில் வேட்பாளர்களுக்கிடையே கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் அளவுக்கு அது செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மன்னாரிலை சாள்ஸ் நிர்மலநாதனும் சுமந்திரனின் கூட்டத்தை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததையடுத்து அந்த கூட்டமும் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments