ஓகஸ்ட் 8 தேர்தல்: புதன் அறிவிப்பு!


Mahinda Deshapriya
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி முன்னரே பதிவு வெளியிட்டது போன்று ஓகஸ்ட் 8ம் திகதி என்பது நிச்சயமாக உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதியைத் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (08) நடைபெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மகிந்த தேசப்பிரிய, “நாடாளுமன்றத் தேர்தலுக்கான மாற்றப்பட்ட புதிய திகதி இந்த வார முடிவுக்குள் அறிவிக்கப்படும். இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களால் தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டது. எனினும், அரசியல் கட்சிகள் சில எம்முடன் கலந்தாலோசிக்க விரும்புகின்றன என தெரிவித்திருந்தார்.

இதன் பிரகாரம் ஓகஸ்ட் 8ம் திகதி தேர்தல் தினமதக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான அறிவிப்பு புதன்கிழமை வர்த்தமானி மூலம் விடுக்கப்படவுள்ளது.

No comments