ஆற்றில் வீசப்பட்டார் அடிமை வியாபாரத்தின் பிதாமகன்!
18 அடி உயர வெண்கலச் சிலையை கயிறு கட்டி கீழே தள்ளி, துறைமுகத்திற்கு உருட்டிச் சென்று சென்று ஆற்றில் தள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எட்வர்ட் கோல்ஸ்டனின் வெண்கல சிலை கயிறுகளைப் பயன்படுத்தி கீழே இழுத்து வீழ்த்தப்பட்டு பின்னர் ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ஒரு அவமதிப்பு என அந்நகரின் முதல்வர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எட்வர்ட் கொல்ஸ்டன் நவம்பர் மாதம் 2 திகதி 1636இல் பிரித்தானியாவின் பிரிஸ்டோலில் நகரில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் 1340 ஆண்டுகளிலிருந்து வணிகர்களாகவே இருந்துள்ளனர்.
அதனால் கொல்ஸ்டனும் வணிகராகவே இருந்தார். சிவப்பு வைன், பழங்கள் மற்றும் துணிகளை விற்பனை செய்தார்.
1680 ஆண்டு எட்வர்ட் கொல்ஸ்டன் றோயல் ஆப்பிரிக்க நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார். ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 80,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்காவிற்கு அடிமை வியாபாரத்தைஆரம்பித்து வைத்தார்.
அக்காலப் பகுதியில் அடிமை வியாபாரத்தில் பிரித்தானியா ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது.
1689 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த அலுவலகமான றோயல் ஆப்பிரிக்க நிறுவனத்தின் துணை ஆளுநரானார். அடிமை வியாபாரத்தில் அவரது செல்வம் அதிகளவு உயர்ந்தது.
கோல்ஸ்டன் தனது செல்வத்தைப் பயன்படுத்தி பிரிஸ்டல், லண்டன் மற்றும் பிற இடங்களில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், அல்ம்ஹவுஸ் மற்றும் தேவாலயங்களை ஆதரிக்கவும் உதவவும் செய்தார். இதனால் அவர் மிகவும் மக்களிடையே பிரபலமானார்.
பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சி சார்பாக பிரிஸ்டால் நகரின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (1710 – 1713) இருந்துள்ளார்.
கோல்ஸ்டன் தனது 84 வயதில் தென்று லண்டலில் உள்ள சர்ரே பகுதியில் உள்ள மோர்ட்லேக் என்ற இடத்தில் 11 அக்டோபர் 1721 உயிரிழந்தார்.
அவரது பெயர் இன்றுவரை பல பிரிஸ்டல் நகரிலும், வீதிகள், பள்ளிகள் மற்றும் கொல்ஸ்டன் ரொட்டி ஆகியவற்றால் நினைவுகூரப்படுகிறன.

17 ஆம் நூற்றாண்டின் முக்கிய அடிமை வணிகரின் சிலை பல ஆண்டுகளாக நகரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை இங்கே நினைவூட்டத்தக்கது.
Post a Comment