8ம் திகதி தேர்தல் திகதி முடிவு?


எவ்வாறேனும் தேர்தலை நடத்திவிடுவதில் அரசு மும்முரமாகியுள்ள நிலையில் பொதுத்தேர்தலுக்கான திகதியை தீர்மானிக்க எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்பாக மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் திகதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பு நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதார அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களிற்கு அனுப்பப்படவுள்ளதால், தபால்மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பிக்குமாறு சுகாதாரத் துறைடன் இணைந்த அனைத்து அதிகாரிகளையும் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் கேட்டுள்ளார்.

No comments