கொலைகளில் சந்தேகம்?


இலங்கை காவல்துறை கட்டமைப்புக்களிவ் இணைந்து கொண்டுள்ள தமிழ் இளைஞர்களது தொடர் மரணங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அரச புலனாய்வு துறையில் கடமையாற்றி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கே.கமலராஜ் (வயது21) என்பவர் கைதுப்பாக்கியால் சுட்டு இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தரான இவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கல்முனை காவல்நிலையத்திற்குள் இயங்கும் தேசிய புலனாய்வுத்துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான யாழ்ப்பாணம், நெல்லியடியைச் சேரந்த கமல்ராஜ் (21) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

இதனிடையே கடந்த ஒரு மாத காலத்திற்குள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் அகாலமரணமடைந்துள்ளனர்.

கனகராஜன்குள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவரும் சில தினங்கள் முன் மாதம்பையில் இன்னொருவரும் தற்கொலை செய்தும் உயிரிழந்திருந்தனர்.

இன்று கல்முனையில் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

No comments