பேராயர் பற்றி அம்பலப்படுத்துவோம்?

கோத்தபாய அரசின் முகவராக மாறியிருக்கின்ற பேராயர் தொடர்பில் மக்கள் சக்தி தரப்பு கண்டனங்களை வீச தொடங்கியுள்ளது.

இதனிடையே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பற்றிய ஏராளமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த தகவலை இந்த நேரத்தில் வெளியிட்ட தன்னால் முடியாது என அவர் தெரிவித்தார்.

தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மதத் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட வேண்டாம் என அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் .

இதன் காரணமாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால்,  தேவையான நேரத்தில் அனைத்து தகவல்களையும் வெளியிடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

No comments