மீண்டும் திறக்கப்படுகிறது வானூர்த்தி நிலையம்!

Bandaranaike-international-airport-in-Colombo
கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 11 ஆம் நாள் முதல் மூடப்பட்ட பண்டாரநாயக்க  (கட்டுநாயக்க) வானூர்தி நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் திறக்கப்படவுள்ளதாக  சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வானூர்தி நிலையத்தை திறப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் நாள் வானூர்த்தி நிலையத்தை திறக்கத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைககு வரும் வருகையாளர்கள் வானூர்தி நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை அறிக்கைகளை வழங்குவோம்.

அந்த பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை வருகையாளர்கள் வானூர்தி நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள விடுதிகளில் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments