நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த திருட்டுக் கும்பல்

யாழ்ப்பாணம் வயாவிளான் குரும்பசிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த திருட்டுக் கும்பல்
வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

வீட்டுக்குள் நுழையுமுன் வெளிலியிருந்த மின்குமிழ்களை அடித்து நொருக்கிவிட்டு இருளில் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

வீட்டு சாரளரக் கண்ணாடிகள் உடைத்து நொருக்கப்பட்டதுடன், வீட்டின் பொருட்களையும் சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் கால்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments