வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா! பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ள டிரம்ப்!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் செய்தி தொடர்பாளருக்கு  கொரோனா வைரஸ் உள்ளது என சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் இரண்டாவது நபராக இந்த வாரம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பென்ஸ் உதவியாளரை பகிரங்கமாக அடையாளம் காட்டிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் வைரஸ் பரவுவது குறித்து “கவலைப்படவில்லை” என்றார். எனினும்  வெள்ளை மாளிகைக்குள்  பாதுகாப்பு நெறிமுறைகளை  அதிகாரிகள் கடுமைப்படுத்தியுள்ளதாக  கூறினர்.


No comments