பிரித்தானியாவில் திருட்டுப் போனது 160,000 பவுண்கள் பெறுமதியான சுவாசக் கவசங்கள்!!

பிரித்தானியாவில் 160,000 பவுண்கள் பெறுமதியான சுவாசக் கவசங்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். மாஸ்செஸ்டர் சால்ஃபோர்டில் பகுதியில்
களஞ்சியசாலையில் வைக்க்பபட்டடிருந்த சுவாசக்கவசங்களே களவாடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையைச் சேர்ந்த டெட் இன்ஸ்பெக்டர் கிறிஸ் மேனியன் கருத்துரைக்கையில்:-

கடந்த புதன்கிழமை களஞ்சியசாலையின் சுருள் கதவின் தகரைத்தை வெட்டி நுழைந்த மூவர் குறித்த முகக்கவசங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இது ஒரு பாரிய குற்றம் என்றார்.

களவு போன 80 ஆயிரம் முகக் கவசங்கள் நகராட்சியின் கீ்ழ் இயங்கும் பாராமரிப்பு நிலையங்கள் மற்றும் என்.எச்.எஸ் மருத்துவ மனைகளுக்கும் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடர்கள் இரண்டு மணிநேரம் செலவளித்து 10 அடுக்குள்ள 350 பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

No comments