முன்னாள் அமெரிக்க வீரர்கள் மீது பயங்கரவாதம் மற்றும் சதிக் குற்றச்சாட்டு!

வெனிசுலா அதிபர் நிக்கோலா மதுரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு நிக்கோலா மதுரோவை அமெரிக்காவுக்கு கடத்திச் செல்ல அமொிக்கா
மேற்கொண்ட சதி முயற்சி வெனிசுலா படையினரால் முறியடிக்கப்பட்டது.

இச்சதி நடவடிக்கையை நடத்துவதற்கு கரீபியன் கடலின் ஊடாக வெனிசுலா நாட்குள் நுழைந்து இரு முன்னாள் அமொிக்க படைவீரர்கள் உட்பட 31 கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டவர்.

அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில் நடத்தப்படவிருந்த சதிப் புரட்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது என  வெனிசுலா அதிபர் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

கைது செய்யப்பட்ட இரண்டு முன்னாள் அமெரிக்க வீரர்களுக்கு பயங்கரவாதம், சதி, ஆயுதக் கடத்தல், என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெனிசுலா இராணுவத்தால் பிடிக்கப்பட்ட 31 பேரில் லூக் அலெக்சாண்டர் டென்மன் மற்றும் ஐரான் பெர்ரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களுக்கு 25 வருடம் முதல் 30 வருடங்கள் சிறைத் தண்டணை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

No comments