சஜீத்-ரணில்:ஏட்டிக்குப்போட்டி!


சஜித் தரப்பினை கூண்டுடன் நீக்க ரணில் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயற்குழு கூட்டங்கள் இன்று (29) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம், கோட்டையில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments