இன்றும் யாழ்.பல்கலையில் சுடரேற்றல்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்ணினுள் எண்ணெய் விட்டு இலங்கை காவல்துறை தேடி அலைய பல்கலைக்கழக பல்கலைக்கழக மாணவர்கள்  இன்றைய தினம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நாகர் கோவிலில் இன்று 11 மணிக்கு நிகழ்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்து விட்டு 9 மணிக்கு நிகழ்வை ஆரம்பித்து நடத்தியிருந்தனர்.நிகழ்வு முடிந்;துவிட்டு ஏற்பாட்டாளர்கள் திரும்பிய பின்னரே பருத்தித்துறையிலிருந்து இரு வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் நிகழ்விடத்திற்கு வந்திருந்தனர்.

அதே நேரம் யாழ்.பல்கலைகழகத்தின் பரமேஸ்வரா வளாகத்தில் இன்றைய தினம், நேற்று விளக்கேற்றிய வாயிலில் ஜீப்பை நிறுத்தி விட்டு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் உட்பட சுமார் 20 பேர் பல்கலைகழகத்தின் மூன்று வாயிலிலும் காவல் இருக்க திருநெல்வேலி பாற்பண்னை பகுதியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

No comments