வீதியால் சென்றவருக்கு நான்கு வேட்டு?


யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


நேற்றிரவு இரவு 10.30 அளவில் மந்திகைப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை மறிப்பதற்கு இராணுவத்தினர் முற்பட்ட நிலையில் அவர் நிறுத்தாமல் பயணிக்க அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு ரவைகள் தீர்க்கப்பட்டமை தெரியவந்துள்ளது. நெஞ்சு, கை, கால் ஆகிய மூன்று இடங்களில் அவர் காயம் அடைந்துள்ளார். 

காயமடைந்த இளைஞர் பசுபதி அனுசன் (வயது 23) எனும் புலோலி என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

வுpவசாயத்தில் ஈடுபட்டுவரும் தந்தைக்கு வீட்டில் இருந்து உணவு எடுத்து சென்று; வீடு திரும்பும் போதே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

No comments