முற்றுகிறது உள்வீட்டு மோதல்?


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இடம்பெற்று வரும் கொரோனா
வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் பிசிஆர் பரிசோதனைகள் தொடர்பில் வதந்திகளைப் பரப்பிய ஊடகங்கள் மற்றும் அதற்கு தூண்டுதலாக இருந்தோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் சைபர் குற்றவியல் விசாரணையுடன் இணைந்த இணைய பாதுகாப்புக்கான தேசிய மையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி மற்றும் மருத்துவ பீட பதில் பீடாதிபதி ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை நேற்று (11) வழங்கியுள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டின் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

No comments