மாவைக்கு ஒன்றுமில்லை?


தேர்தலில் வாக்குகளை இழந்து விடுவோம் என்கின்ற அச்சத்தில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் உளறிக் கொண்டிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுதலை புலிகளின் தியாகங்களை வைத்து தான் ஒருபோதும் வாக்குகேட்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் அண்மையில் ருத் வித் சமுன்திக்க என்ற சிங்கள சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி தொடர்பாக கூட்டமைப்பிற்குள் உள்ளவர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்ற நிலையில் இது குறித்து சமூக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப் புலிகளின் ஆயத ரீதியான செயற்பாடுகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செய்ற்பாடுகளையும் இணைத்து தென்னிலங்கையில் கூட்டமைப்பு தொடர்பாக தீவிரவாத சிந்தனையை உருவாக்கும் நோக்கில் குறித்த நேர்காணல் அமைந்திருந்த நிலையிலேயே தன்னால் விடுதலைப் புலிகளின் ஆயத வன்முறையை ஆதரிகக்கவில்லை என்ற பதில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த நேர்காணலில் முழுமையான பின்னணிகளை கருத்தில் கொள்ளாமல் கூட்டமைப்பு தலைவர்கள் சிலர் கருத்துக்களை கூறிவருகின்றார்கள் எனவும்; தேர்தல் காலங்களில் அவசர அவசரமாக சிலரது வாய்களில் இருந்து இவ்வாறான கூற்றுக்கள் வருவது சகஜம் என தெரிவித்த அவர் வாக்குகள் இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் இவ்வாறு கருத்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஆயத ரீதியான வன்முறைகளை தான் ஒருபோதும் ஆதரித்தவன் இல்லை எனவும் அகிம்சை ரீதியான செயற்பாடுகளையே எப்போதும் ஆதரித்து வருவதாகவும் தெரிவித்ததார்.

அதேவேளை, விடுதலை புலிகளையோ அவர்களது ஆயுரதப்போராட்டத்தையோ ஒருபோதும் இகழவில்லை எனவும் அவர்களுடைய தியாகங்கள் மதிக்கப்பட வேண்டும். அதற்காக வன்முறையில் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற கருத்தை தன்மீது யாரும் திணிக்க முயலக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

No comments