விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ்!!

அமெரிக்காவில் இரு நாசா விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் எனும் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நோக்கிப் பாய்ந்துள்ளது.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ரொக்கட் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஸ்பேஸ் செண்டர் 39A இருந்து இந்த ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது. 

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே விண்ணுக்கு சென்றவர்கள்.  இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள். அனுபவத்தின்படி இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரு விண்வெளி வீரர்களும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தனர். ஓய்வு பெற்ற பின்னர் ஒரு அமெரிக்கக் குழுவினர் அமெரிக்க பிராந்தியத்திலிருந்து பயணத்தை மேற்கொண்டது இதுவே முதல் முறை.


No comments