ஆஸ்திரேலியா போல் படகு மூலம் வரும் அகதிகளை நாடுகடத்த இங்கிலாந்து திட்டமிடுகிறதா?
Roman Quaedvlieg என அறியப்படும் அந்த ஆஸ்திரேலிய எல்லைப்படையின் முன்னாள் தலைமை அதிகாரி, அவரது செயல்பாட்டு காலத்தில் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த அகதிகள் படகுகளை வந்த இடத்திற்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள Roman Quaedvlieg, குறிப்பிடத்தக்க அளவில் குடியேறிகளின் வருகையை குறைக்க வேண்டும் என்றால் (ஆஸ்திரேலியா) பின்பற்றியது போன்ற நடவடிக்கைகளை இங்கிலாந்து அறிமுகப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு, இதுவரை இங்கிலாந்தில் 1,600க்கும் மேற்பட்ட குடியேறிகள் படகு மூலம் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதுபோன்ற படகு வருகைகளை தடுக்கவே, ஆஸ்திரேலியாவின் எல்லைக்கட்டுப்பாடு நடவடிக்கை போன்று நடவடிக்கை மேற்கொள்ளலாம் என இங்கிலாந்து சிந்தித்து வருவதாக சொல்லப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் எல்லைகள் இறைமை நடவடிக்கை மனித உரிமை மட்டங்களில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகிய ஒரு நடவடிக்கை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, ‘கடல் வழியாக வரும் அகதிகளை ஒருபோதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம், அவர்களின் படகுகள் திருப்பி அனுப்பப்படும்’ எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றது.
Post a Comment