தடுப்பு முகாமில் கொரோனா தொற்று: மலேசியாவில் பரவும் அச்சம்

மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று உறுதிச்
செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று ஏற்படாத வெளிநாட்டு குடியேறிகள் நாடுகடத்தப்படுவார்கள் என மலேசிய அரசின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்திருக்கிறார். 

விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், முறையான விசாயின்றி தங்கியிருப்பவர்கள், சட்டவிரோத மலேசியாவுக்குள் நுழைந்தவர்கள் உள்ளிட்டவர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதும் மலேசியா, அவர்களை கைது செய்யும் கொரோனா கட்டுப்பாட்டிற்கு இடையிலும் தொடர்ந்து வருகின்றது. 

இந்த சூழலில், தடுப்பு முகாம்களுக்குள் கொரோனா தொற்று பரவியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு குடியேறிகள 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்படுள்ளது.

இத்தொற்றினால் இந்தியர்கள் 41 பேர், இலங்கையர்கள் 2 பேர், வங்கதேசிகள் 53 பேர், இந்தோனேசியர்கள் 38 பேர், மியான்மரிகள் 37 பேர், பாகிஸ்தானியர்கள் 28 பேர், சீனர்கள் 17 பேர், 4 கம்போடியர்கள், 3 நேபாளிகள், பிலிப்பைன்ஸ், லிபியா, எகிப்து, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Malaysia Agro Exposition Park Serdang (MAEPS), Sungai Buloh தொழுநோய் மருத்துவமனை, கோலம்பூர் மருத்துவமனையில் உள்ள பழைய மகப்பேறு கட்டிடம் ஆகிய இடங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடியேறிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இஸ்மாயில் குறிப்பிட்டிருக்கிறார். 

இந்த இடங்களில் 1,430 பேர் வரை சிகிச்சை வழங்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. 

No comments