மகனுக்காக பதவியை பயன்படுத்தினாரா மஹிந்த?

நெதர்லாந்தில் இருந்து தனது மகன் விதுர தேசப்பிரியவை நாட்டுக்கு அழைத்து வர தனது பதவி நிலையை பயன்படுத்தி அரசிடம் கோரிக்கை விடுத்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (6) மறுத்துள்ளார்.

இது தொடர்பில் தன் மீது அபாண்டமான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்,

'தனியே ஒரு தந்தையாக மட்டுமே மகனின் ஆவணங்களை அரச அதிகாரிகளிடம் கையளித்தேன்' என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விதுர தேசப்பிரிய உள்ளிட்டோர் இன்று நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments