தேர்தல் பதாகைகள் இனி நீக்கப்படும்; மகேசன் நடவடிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் தேர்தல் விளம்பர பதாகைகளை அகற்றும் நடவடிக்கை நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்,

தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளை அகற்றுவதாக தர்மானிக்கப்பட்டது.

முதற்கட்டமாக சில பதாகைகள் அகற்றப்பட்டதாகவும் ஏனைய பதாதைகளும் விரைவில் அகற்றப்படவுள்ளதாகவும் - என்றார்.

No comments