கேப்பாபுலவு:முதியவர் உடலம் காட்டில் அடக்கம்?


கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த நபரின் சடலத்தை முல்லைத்தீவில் தகனம் செய்வதற்கு இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து வவுனியாவில் மின்சாரத்தில் எரிப்பதற்கான மயானம் பழுதடைந்த நிலையில் களிக்காடு காட்டுப்பகுதியில் தகனம் செய்ய இன்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடுகள் அற்ற நிலையில் நிர்க்கதியாகியிருந்த மற்றும் யாசகம் பெற்று வந்த 200ற்கும் மேற்பட்டவர்கள் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.

இவர்களில் இருவர் நேற்றைய தினம் சுகயீனம் காணரமாக உயிரிழந்தனர்.

அவர்களின் சடலத்தை முல்லைத்தீவில் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதோடு வவுனியாவில் மின்தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்இ அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் சடலத்தை இன்று முல்லைத்தீவு குமாரபுரம் மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்திலிருந்து சடலம் தகனம் செய்வதற்கான வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில்இ வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பிரதேச இளைஞர்கள் சடலத்தை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் எந்தவொரு பாதுகாப்பும் இன்றி சடலத்தை தகனம் செய்ய முற்பட்ட வேளையிலேயே அவர்கள் எதிர்ப்பு வெளியிட்டதுடன் வவுனியாவில் சடலங்களை மின் தகனம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் மின்சாரத்தில் எரிப்பதற்கான மயானம் பழுதடைந்த நிலையில் களிக்காடு காட்டுப்பகுதியில் தகனம் செய்ய இன்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments