வெளியே வந்தார் வட கொரிய ஜனாதிபதி

வட கொரிய ஜனாதிபதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று (01) முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானதன் பின்னர் அவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் கிம் ஜோங் பொது வெளியில் தோன்றாமையால் அவர் உடல்நிலை குறித்து பல சந்தேகங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

அத்துடன் அவர் மரணமடைந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

No comments