தமிழின அழிப்பினை நினைவேந்திய தமிழின உணர்வாளர்கள்!

வருடந்தோறும் சுவிஸ்பேரண் மாநிலத்தில் சரவ்தேச ரீதியிலாக நடைபெற்றுவரும் "GRAND PRIX VON BERN" ஓட்டப் போட்டியானது தற்போது கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம்
காரணமாக நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுவிஸ் கூட்டாட்சி அரசானது இவ்வாண்டுக்கான ஓட்டப்போட்டியினை நிறுத்தியிருந்த போதிலும், கலந்து கொள்ள ஆர்வமுள்ள போட்டியாளர்கள் இவர் வாட்டத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விசேட செயலி மூலம் போட்டியாளரக்ள் அவர்கள் வாழும் இடங்களிலேயே அரசினால் விடுக்கப்பட்ட சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து பங்கேற்க முடியும் என போட்டி ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அநத்வகையில் 09.05.2020 சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஓட்டப் போட்டியில் தமிழின உணர்வாளரக்ள் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தய தூரத்தைக் கடந்ததுடன் சிறிலங்காவில் சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழின அழிப்பினையும் வெளிப்படுத்தினர்.

அகவணக்கத்துடன், தமிழின அழிப்பின் அதியுச்சமான மே18 முள்ளவாயக்கால் தமிழின அழிப்பு நினைவுகளையும் நெஞ்சிலிருத்தி, உறுதிமொழியுடன் தமது “Run Against Genocide in Sri Lanka“ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து இன உணர்வாளர்கள் நால்வர் பங்குபற்றியதுடன் தமது வலி சுமந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தி நின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதக் காலப்பகுதியில் நடாத்தப்படும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட வேற்றினத்தவர்கள் பார்வையிடக் கூடியதுமான இவ் ஓட்டப் போட்டியில் எமது தமிழின அழிப்பினை தொடர்ச்சியாக வெளிக்கொணர வேண்டிய தேவை உள்ளதனால் சுவிசில் இப்போட்டிகளில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments