ஜெனீவாவில் உணவுக்காக ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் காத்திருப்பு!!

கொரோனா நெருக்கடி நிலையில் சுவிற்சர்லாந்து நாட்டில் பிரபலமான நகரில் உணவுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்ற சம்பவம்

அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் இன்று சனிக்கிழமை ஆயிரக்கணக்கான வறுமையில் வாழும் மக்கள் உணவுக்கான ஒரு கிலோ மீற்றர் வரையிலான நீண்ட வரிசையில் உணவுக்காக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது கொரோனா 19 நெருக்கடியில் ஜெனீவாவின் பொதுவாக கண்ணுக்கு தெரியாத ஏழைகள் மீது கவனத்தை ஈர்க்கிறது.

வைப்பகங்கள் (வங்கிகள்) மணிக்கூடுகள், அணி கலன்கள், சொக்கிலேற் என ஆடம்பர பொருட்களுக்கு புகழ்பெற்ற சுவிற்சர்லாத்தில் குறிப்பாக ஜெனீவாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கே உணவுக்காக மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கினார்கள் என்று உணவு வழங்கும் காரவனே டி சோலிடரைட் (Caravane de Solidarite) நிறுவம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவின் வெர்னெட் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதற்காக காலை 9 மணிளவில் ஆரம்பமானது. மக்களோ நான்கு மணி நேரம் காத்திருந்து, 1.5 கிலோ மீற்றர் தூரம் மூகமூடி அணிந்து சமூக இடைவெளியைப் பிற்பற்றி உணவுக்காக காத்திருந்தனர்.

தொடர்ச்சியாக 6 சனிக்கிழமையாக மக்களுக்கு உணவு வழங்குவதாகவும். ஒவ்வொரு தடவையும் அதிகளவான மக்கள் வருவதாகவும் கேரவனே டி சோலிடரைட்டின் தலைவரான சில்வானா மாஸ்ட்ரோமாட்டியோ ஏ.எஃப்.பியிடம் கூறியுள்ளார்.

No comments