தகுதியில்லாத தலைவர், டிரம்ப்க்கு எதிராக அணிதிரளுங்கள்; ஒபமாவின் கருத்தால் பரபரப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை டொனால்ட் டிரம்ப் கையாண்டது குறித்து முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக கண்டித்ததோடு
இது "முழுமையான குழப்பமான பேரழிவு"என்றும்கூறியுள்ளார்.

 தனது நிர்வாகத்தின் முன்னாள் உறுப்பினர்களுடன் பேசிய ஒபாமா ,நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்பை எதிர்கொள்ளத் தயாராகுமாறும்,  ஜோ பிடனுக்குப் பின்னால் அணிதிரள்வதற்கு தன்னுடன் இணையுமாறு முன்னாள் ஊழியர்களை ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் பேரழிவை டொனால்ட் டிரம்ப் கையாண்ட விதம் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது முன்னால் அமெரிக்கத் தலைவர் இவ்வாறு கூறியுள்ளதும் , தேர்தல் பிரச்சரத்தில் டிரம்ப்க்கு எதிராகஅணிதிரளுமாறும்கூறியுள்ளமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைஏற்ப்படுத்தியுள்ளது.

No comments