வீணானது மகிந்த கூட்டம்?


தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் தீர்க்கமான முடிவுகள் ஏதுமின்றி நிறைவடைந்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அழைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(சனிக்கிழமை) ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான காத்திரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற எதிர்பார்ப்போடு  கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும், தேர்தல் நடத்துவது தொடர்பாக கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை ஆராய்ந்து நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments