இலங்கை மீது மீண்டும் சைபர் தாக்குதல்?


பொதுநிர்வாக அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விமானப்படை ஊடக செய்தித் தொடர்பாளர் குறூப் கப்டன் துஷன் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
சைபர் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இரண்டு வலைத்தளங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments