சடலங்களுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புதைகுழிகள்!

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் இந்த வாரம் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால் அந்நாட்டில் சடலங்களைப் புதைப்பதற்கு புதைகுழிகள்
முன்கூட்டியே வெட்டப்பட்டு ஆயத்த நிலையில் உள்ளன.

சாவோ பாலோவின் நகரில் உள்ள விலா ஃபார்மோசா என்ற இடத்தில் அமைந்துள்ள இடுகாட்டில் பல்லாயிரக்கணக்கான புதைகுழிகள் வரிசையாக வெட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதை வானிலிருந்து எடுக்கப்பட்ட புதைப்படங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த வார தொடக்கத்தில் ஸ்பெயினையும் இத்தாலியையும் முறியடித்து உலகின் நான்காவது மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக பிரேசில் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

No comments