காவல்துறை நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லையாம்?


தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரபலங்கரளை தனிமைப்படுத்துவது தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை விலக்கிக்கொள்ள நீதிமன்று பிறப்பித்த உத்தரவு இன்று மதியம் வரை கைகளில் கிடைக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


கடந்த 17ம் திகதியன்று யாழ்ப்பாண நீதிமன்றில் நினைவேந்தலில் பங்குபற்றி 11 நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை  மன்றிடம் பெற்றுக் கொண்ட யாழ்.பொலிசார் உடனடியாக இரவு நேரமே குறித்த கட்டளையை பிராந்திய சுகாதார அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களிடம் கொண்டு சென்று சேர்த்தார்கள். இரவு நேரத்தில் பிராந்திய சுகாதார அதிகாரிகளிடம் கொடுத்து அதனை உடனடியாகவே சம்பந்தப்பட்ட நபர்களிடம் சேர்க்குமாறும் கேட்டிருந்தனர்.

ஆனால் நேற்று 18ம் திகதியன்று நீதிமன்று தனது 17ம் திகதியன்றைய கட்டளையை திரும்ப பெற்றது. அதன் தீர்ப்பு காலை 12.30 மணியளவில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிமிடம் வரை குறித்த கட்டளையை பொலிசார் பிராந்திய சுகாதார அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கவில்லை.
தடையுத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைகளை பெற்றவுடன் அன்றே இரவு 11 மணியானாலும் கொண்டு சேர்த்த பொலிசாரால் குறித்த கட்டளையை பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கி இரவு நேரத்திலும் கொண்டு சென்று சேர்க்குமாறு அறிவித்த பொலிசாரால் நேற்று காலை 12.30 மணியளவில் வழங்கிய கட்டளையை ஏன் தற்போது வரை கொண்டு சென்று சேர்க்கவில்லை என்பதில் இருந்தே பொலிசாரின் எண்ணம் எது என்பது வெளிப்படையாகியிருப்பதாக முன்னணி செயற்பாட்டாளர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

No comments