சேறுபூசுவதாக சுகாஸ் புகார்?


எங்களுக்கெதிராகப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து இன்று அனைவரும் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டோம்.அவ்வாறே எதிர்வரும் பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்யான அவதூறுகளிலிருந்தும் நிச்சயம் வெளியில் வருவேன் என தெரிவித்துள்ளார் சட்டத்தரணி க.சுகாஸ்.

சமூக ஊடகங்களில் தன் தொடர்பில் அவதூறு பரப்பியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள அவர் இது தொடர்பில் இலங்கை காவல்துறையில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதியை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ஆள் பிணைக்கு மன்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என பணம் வாங்கிய சட்டத்தரணி என தன் பெயரை சிலர் முகநூலில் குறிப்பிட்டு உள்ளதாகவும், தனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றதாக தகவல் கிடைக்கபெற்றது. அது செவி வழி மூலம் வந்த தகவலே. அது தொடர்பில் ,மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து அவ்வாறான மோசடிகள் ஏதாவது நடைபெற்று இருப்பது விசாரணைகளின் மூலம் கண்டறிந்தால் ,மோசடியில் ஈடுபட்ட சட்டத்தரணிக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். அதற்கான நடவடிக்கைகளை நாம் தற்போது எடுத்துள்ளோம்.

இதற்கு இடையில் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி மோசடி சட்டத்தரணியாக என்னை சித்தரிக்க முயல்கின்றனர். எனது அரசியல் வளர்ச்சி பிடிக்காத சிலரே அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். நான் அவ்வாறான மோசடிகள் செய்தவனும் இல்லை இனிமேலும் செய்ய போவதும் இல்லை.என் மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை சுமர்த்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளேன்.

ஆனாலும் மோசடி சம்பவம் தொடர்பில் செவி வழி மூலம் வந்த தகவலை வைத்து எமது சட்டத்தரணிகள் சங்கம் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்போம் என உறுதியாக கூறுகிறேன் என சுகாஸ் தெரிவித்துள்ளார்.

No comments