குடமுருட்டி பாலம் திருத்தம்:திருடரை காணோம்?


இனந்தெரியாத நபர்களால் களவாடப்பட்ட கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் கேடர்கள் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் திருத்தப் பணிகள் நேற்று சனிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம்.மொறாயஸின் நேரடிக் கண்காணிப்பில் கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டு பாலத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.

இதனிடையே திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டும் குற்றவாளிகள் எவரும் கைதாகவில்லை.

கொள்ளை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் இருந்த போது கனரக வாகனங்கள் சகிதம் சுமார் ஒன்றரை கோடி பெறுமதியான கேடர் பொருட்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments