மேலும் கொரோனா:போக்குவரத்து வழமைக்கு?


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் இன்று மாலை இனங்காணப்பட்டுள்ளனர்.நாள் தோறும் கொரோனா தொற்று அடையாளம் காணப்படுகின்ற நிலையில் இயல்புவாழ்வினை கொண்டு வர அரசு முனைப்பு காட்டிவருகின்றது.

இதனிடையே இன்று அடையாளம் காணப்பட்டவர்கள்; குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளானோர எண்ணிக்கை 1094 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 26ம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான (கொழும்பு, கம்பஹா தவிர்த்து) போக்குவரத்து சபை பேரூந்து சேவை மீள தொடங்கப்படும் என இலங்கை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

No comments