கோத்தாவிற்கு வேறு வழியில்லை:ரணில்!


நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விரும்பாமையால், உயர்நீதிமன்றமே உரிய தீர்ப்பை வழங்க வேண்டும் என்று, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் நேற்று (20) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த அவர், பொதுத்தேர்தலுக்கான திகதி தொடர்பில் தற்போது தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்ற வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜூன் மாதம் 2ஆம் திகதியுடன் தேர்தலுக்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு காலாவதியாகின்றது என்றும் இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, ஜனாதிபதி விரும்பாமையால் உயர்நீதிமன்றமே உரிய தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவின் தாக்கம், வெளிநாட்டு பணியாளர்கள் மீள வருகையால் அந்நிய செலாவனி இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால், பொருளாதார நெருக்கடி நிலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பாரியதொரு சவால் நாட்டின் முன்னுள்ளதாகவும் தெரிவித்த அவர், உரிய திட்டமொன்றை வகுக்காது முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments