வேகமாக இரண்டாம் நிலைக்கு வருகிறது ரஷ்யா! புடினின் செய்தித் தொடர்பாளருக்கும் கொரோனா!

இன்று செவ்வாய் மேலும் 10,899 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் உலகின் மூன்றாவது  மிக அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கொண்டுள்ளது நாடாக  ரஷ்யா மாறியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறுதித் தகவலின் படி ரஷ்யாவின் மொத்த வைரஸ் தொற்றாலர்களின் எண்ணிக்கையை 232,243 ஆகக்  வந்துள்ளன, இது பிரிட்டனின் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸுடன் தன்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க வல்லரசின் வெள்ளை மாளிகையை ஆட்டங்காண வைத்துள்ள கொரோனா வைரஸ் இப்போது ரஷ்யா அதிபர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கொரோனா சாதகாமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை தூண்டியுள்ளது.

இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய செய்தி தொடர்பாளர்  "ஆம், எனக்கு உடல்நிலை சரியில்லை, நான் சிகிச்சை பெற்று வருகிறேன்" என்று கூறினார். 52 வயதான பெஸ்கோவ் 2008 முதல் புடினின் செய்தித் தொடர்பாளராக இருந்துவருகின்றமை குறிப்பிடத்தது.

No comments