ஒருலட்சம் பேருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கியுள்ள கத்தார் ஏர்வேஸ்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் காட்டிய தைரியத்திற்கு நன்றி செலுத்தும்முகமாக உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு 100,000 இலவச பயணச்சீட்டுக்களை கத்தார் ஏர்வேஸ்  கொடுத்துள்ளது. மேற்கொண்ட நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வேகுவாகப் பாராட்டி வரவேற்றுள்ளது.

கத்தார் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் கிறிஸ்டியன் டுடோர், COVID-19 க்கு எதிரான போரில் சுகாதார வல்லுநர்கள் தங்கள் சக்திகளை மீறிய பணியை செய்துவருகின்றனர் என்றும், "அவர்கள் எங்கள் முழு மனதுடன் பாராட்டுக்கு தகுதியானவர்கள்" என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா நெருக்கடிகளால் இடைநடுவில் சிக்கித் தவிக்கும் குடிமக்களை திருப்பி அனுப்புவதற்கான ஐரோப்பிய ஒன்றிய முயற்சிகளுக்கு பல வானூர்தி நிறுவனங்கள் உதவியுள்ளது குறிப்பாக கத்தார் ஏர்வேஸ் ,தொற்று நோய் மிகவும் கடினமா பாதித்த வாரங்களிலும் ஐரோப்பாவிற்கு தொடர்ந்து விமானங்களை இயக்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

No comments