அடையாள அட்டை அவசரம்:சோதனைகள் ஆரம்பம்?


சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய பொதுமக்கள் மற்றும் அரச அலுவலகங்கள் செயற்படுகின்றனவார்களா என்பதை அவதானிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக நேற்றைய தினம் கைதடியிலுள்ள வடமாகாணசபை வளாகத்திலும் ஏனைய அலுவலகங்களிலும் சோதனைகள் முன்னெக்கப்பட்டது.

இதனிடையே கொழும்பில் இன்று (13) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேதேசிய அடையாள அட்டைக்கான ஒருநாள் சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று முதல் (13) ஆரம்பமாகிறது

மிகமிக அவசியம் என்று கருதப்படுகின்ற விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்களை மட்டும் ஏற்றுக்கொள்ளும்படி கிராம அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது குறித்த விண்ணப்பதாரியின் அவசியதேவையை தெளிவுபடுத்தும் கடிதம் ஒன்றை பெற்று அதனை கிராம அலுவலர் உறுதிப்படுத்தி விண்ணப்பத்துடன் ,ணைத்தல் அவசியம்.

குறிப்பாக தற்போதைய சூழலில் நிவாரண உதவி கொடுப்பனவுகள் மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல் போன்ற மிக அவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.விண்ணப்பதாரரி கொழும்பு செல்வது அவசியம் இல்லை.

No comments