ஈரானிய ஆயுதப் படகுகளைத் தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானியக் கடற்படையினரின் ஆயுதப் படகுகளை தாக்கி அழிக்குமாறு அமொிக்காவின் அதிபர் டொனால் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இது தொடர்பாக அமொிக்க அதிபர் தனது கீச்சகத்தில் இன்று புதன்கிழமை அமொிக்கக் கடற்படைக் கப்பல்கள் அருகே வந்து ஆத்திரமூட்டும் ஈரானிய ஆயுதப் படகுகளை தாக்கி அளிக்க கடற்படையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கள் தெஹ்ரானுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்று பென்டகனின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்,

டிரம்பின் ட்வீட்டைத் தொடர்ந்து, ஈரானிய ஆயுதப்படை செய்தித் தொடர்பாளர் தனது இராணுவத்தை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றுவதில் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இன்று, மற்றவர்களை கொடுமைப்படுத்துவதற்கு பதிலாக, அமெரிக்கர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் படைகளின் உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்" என்று ஈரானின் அரை அதிகாரப்பூர்வ ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனத்தின்படி, அபோல்பாஸ்ல் சேகார்ச்சி கூறினார்.

ஈரானிய புரட்சிகர காவல்படை கடற்படையின் 11 கப்பல்கள் அமெரிக்க கப்பல்களுக்கு அருகில் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு புதன்கிழமை டிரம்பின் இக்கருத்துக்கள் வந்ததுள்ளது.

வளைகுடாவில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி அமொிக்க கடற்படையில் கப்பல் அருகே ஈரானியக் கடற்படையின் சிறிய ரக ஆயுதப் படகுகள் நெருங்கி ஆத்திரமூட்டியதால் அப்பகுதியில் கடந்த வாரம் பதற்றம் நிலவியது.

ஹார்முஸ் ஜலசந்தி மூலம் உலகின் 20 சதவீத எண்ணெய் கடந்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments