பிரான்சில் நான்காது இரவு கழிந்து கலவரம் தொடர்கிறது?

பிரான்ஸ் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ளூர்வாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றத்தால் கலவரம்
மூண்டுள்ளது. இதனால் பிரான்சில் பல நகரங்களில் குப்பைத் தொட்டிகள் எரிக்கப்பட்டு மகிழுந்துகள் அடித்து நொருக்குகிறார்கள் உள்ளூர்வாசிகள்.

கடந் சனிக்கிழமை 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உந்துருளி ஒன்றில் தலைக்கவசம் அணியாமல் பயணித்துள்ள போது காவல்துறையினரின் மகிழுந்தில் மோதியுள்ளார்.

ஆனால் இளைஞன் உந்துருளியில் சென்றபோது காவல்துறையினர் வேண்ம் என்றே மகிழுந்தின் கதைவைத் திறந்ததால் உந்துருளி கதவில் மோதி இளைஞன் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவரின் கால்கள் முறிந்ததுள்ளது. இதுக்குப் பல சாட்சிகள் இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை காவல்துறையினர் மறுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதன.

பிரான்ஸ் கொரோனாாவல் தொடர்ந்து முடக்க நிலையில் இருக்கும் போது, இச்சம்பவம் நான்கு இரவுகள் கடந்துள்ள நிலையில் தீயாக பரவி காவல்துறையினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டியுள்ளது. இது இன்னும் தீவிரமாகலாம் என அதிகாரிகள் கவலை கொள்கின்றனர்.

நிலைமைகள் அனைத்தும் கண்காணிக்கப்படுவதாக பிரான்சின் அதிபர் இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

துலூஸில் பல குப்பைத் தொட்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் மகிழுந்துகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ட்ராஸ்பேர்க், போர்டியாக்ஸ், வெர்சாய்ஸ் மற்றும் லியோன் ஆகிய இடங்களிலும் வன்முறையச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

விபத்துக்குள்ளான இளைஞன் மருத்துவமனையிலிருந்து தனது சட்டவாளர் ஊடாக நேற்று செவ்வாய்கிழமை மாலை ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்:-

நீங்கள் மகழுந்துகளை அடித்து நொருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டுகிறேன். நீங்கள் அனைவரும் வீட்டுக்குச் சென்று அமைதியாக இருக்குமாறு வேண்டுகிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments