சாதித்தது மீண்டும் யாழ்.மருத்துவ பீடம்!


யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் கொரோனோ நோயாளிகளுக்கு ஆய்வுகளை முன்னோடியாக மேற்கொண்ட டாக்டர் ஆறுமுகம் முருகானந்தன் மற்றும் டாக்டர் கலாமதி முருகானந்தன் (மூத்த விரிவுரையாளர்கள், மருத்துவ பீடம்) ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

யாழ்ப்பாணத்தில் மருத்துவ வரலாற்றில் அவர்கள்; எப்போதும் நினைவில் இருப்பார்கள் என மருத்துவத்துறை சார்ந்த பலரும் பாராட்டுக்களை முன்வைத்துவருகின்றனர். 

தமிழர்களால் எதுவும் முடியுமென்பதை மீண்டுமொரு தரம் நிரூபித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் அறிவித்துள்ளார்.
இதுவரையில் அனுராதபுரத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டு வந்திருந்தது.

தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

இதன் மூலம் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றனதென அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சில தரப்புக்கள் இதனை முடக்க முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

No comments