:படையினர் தலையிடுவதாலேயே மக்கள் எதிர்ப்பு :சுரேன்
சுகாதார துறையை முன்னிலைப்படுத்தாமல் படையினர் முடிவெடுப்பதாலேயே மக்களின் எதிர்ப்பு வலுக்கிறதாக தமிழீழ வி:டுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் தனிமைப்படுத்தல் மற்றும் இடைத்தங்கல் மையங்களையும்இ சிகிச்சை நிலையங்களையும் அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்படுவதுடன் அவற்றை படைகள் விஸ்தரிக்க முயற்சிக்கும்போது மக்களிடையே வீண் சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டு வருகின்றது.
குறிப்பாக அன்மையில் வடக்கு மாகாணத்தில் யாழ். கோப்பாய் கல்வியியற் கல்லூரிஇ வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்க முயன்றபோது அச்ச நிலை காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே இந்த இக்கட்டான சூழலில் இந்த கொரோனா தாக்கத்தை தேசிய பேரிடராக கருதி தேசிய ரீதியில் அனைவரும் மனிதாபிமானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயல்படவேண்டிய நிலையில் இவ்வாறான அச்சங்கள் அல்லது சந்தேகங்கள் ஏற்படுவதற்கு ஆழும் அரசாங்கமே காரணமாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையை விட முப்படையினருக்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதே இந்த முரண் நிலைக்கு காரணமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வடக்கு மக்கள் இராணுவத்தால் பாதிக்கப்பட்டு பல நிலங்களை இன்றுவரை இராணுவத்திடமிருந்து மீட்கமுடியாமல் தவிக்கும் நிலையிலும் கடந்த சில நாட்களாக கடற்படையினர் நூற்றுக்கணக்கில் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையிலும் இராணுவம் நேரடியாக சென்று பொது இடங்களை கையகப்படுத்தும்போது மக்களிடையே அச்ச உணர்வு தோன்றுவது இயல்பானதே. தவிர தமிழ் மக்கள் சிங்களவர்கள் வடக்கில் தனிப்படுத்தப்படக்கூடாது என்பதற்காகவோ அல்லது வேறு இனவாத காரணங்களுக்காகவோ இந்த எதிர்ப்பை காட்டவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் கொரோனா சந்தேக நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் மேலும் பல இடங்களை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றவேண்டி வரலாம். அப்போதும் இராணுவத்தினர் ஊடாக பொது இடங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கும்போது வீணான குழப்பங்கள் ஏற்படலாம்.
எனவே அரசாங்கம் யதார்த்தபூர்வமாக சிந்தித்து உண்மையிலேயே தொற்றுநோய் தொடர்பான அறிவும் நிபுணத்துவமும் கொண்ட சுகாதர துறையினர் உள்ளிட்ட சிவில் நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தனிப்படுத்தப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையங்களையும் நிறுவும்
போது அப்பிரதேச மக்களிடம் சுகாதார அதிகாரிகள் சுகாதார பாதுகாப்பு தொடர்பான உத்தரவாதங்களை வழங்கும் போது அதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்களே அதிகமுள்ளது. இதன்மூலம் சுமூகமான முறையில் எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
Post a Comment