கொரோனாவைக் குணப்படுத்தும் எபோலா மருத்து - அமெரிக்க நிபுணர்கள்

எபோலா நோய்க்கு உருவாக்கப்பட்ட ரெமெடிவிர் (Remdesivir) மருந்து கொரோனா தொற்று நோயைக் குணப்படுத்துவதற்கான உறுதியான
சான்றுகள் உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்று நோயைக் குணப்படுத்த ஆரம்பத்தில் 15 நாட்கள் தொடக்கும் 11 நாட்கள் எடுத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் முழுமையான முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. அவ்வாறு முடிவுகள் வெளியிடப்பட்டால் அது அருமையான முடிவு என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தற்போது கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இறுக்க நிலையில் உயிர்கைளக் காப்பாற்ற இது உதவும். அத்துடன் மருத்துமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்த இது உதவும்.

குறித்த மருத்தை அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (US National Institute of Allergy and Infectious Diseases) 1063 நோயாளிகளிடம் செலுத்தி பரிசோதனை நடத்தியுள்ளதாக இயக்குனர் மருத்துவர் அந்தோனி போசி (Anthony Fauci) கூறியுள்ளார்.

No comments