குணமடைந்தவர்களில் 116 பேருக்கு மீண்டும் கொரேனா! அதிர்ச்சியில் தென்கொரியா!

கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து குணமடைந்த 116 பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவிலேயே கொரனா தொற்றில் இதுவரை 10 ஆயிரம் பேர் தொற்றாளர்களாக இருந்துள்ளர். அவர்களில் 7500 பேர் வரையில் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

இவர்களில் 116 பேருக்கு மீண்டும் கொரேனா தொற்று ஏற்பட்டிருப்பது தென்கொரியாவை அதிர வைத்துள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சிகளை தென்கொரியா ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தென்கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ஜியோங் யூன்கியோங் கூறுகையில்:-

கொரோனாவில் இருந்து விடுபட்டவர்கள் முழுமையாக குணமடையாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்களது உடலில் மீண்டும் வைரஸ் செயல்பட தொடங்கியிருக்கும் என்று கூறியுள்ளார்.

நோயாளியின் உடலில் வைரஸ் முழுமையாக வெளியேறாமல் எச்சங்கள் இருந்திருக்கலாம். அந்த எச்சங்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கும் என மருத்துவர்கள் கருத்துகின்றனர்.

No comments