டிரம்பின் அதிரடி! உலக சுகாதார அமைப்பிற்கு நிதி நிறுத்தம்!

கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு  சரியாகச் செயற்படவில்லை என்று குற்றம் சுமத்திய அமொிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அமொிக்காவால் வழங்கும் நிதியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் மெத்தனப் போக்கே இன்று உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைரசின் தீவிரத் தன்மை பற்றி உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயற்பட்டு தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் அமொிக்க டொலர்களை அமொிக்கா வழங்கி வருகிறது.

இந்நிலையில்  நேற்று செவ்வாய்க்கிழமை வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிபர் டிரம்ப்.

அங்கு அவர் கூறுகையில், உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வாகம் மற்றும் வைரஸ் குறித்த உண்மைகளை மறைத்தமை குறித்து விரிவான மதிப்பீட்டு விசாரணைகளை நடத்த எனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

விசாரணைகள் நடந்து முடியும் வரை அவர்களுக்கு அமொிக்காவால் வழங்கும் நிதியை நிறுத்துவதாக அவர் அறிவித்துள்ளார்.

No comments